ஆசிரியர் பணியில் இருக்கும் அன்பு நண்பர்களுக்கு..

நீங்கள் செய்வது மகத்தான காரியம். ஒரு தலைமுறையையே செதுக்குகின்றீர்கள். ஏற்கனவே நிறைய வாசிப்பீர்கள் என நம்புகிறேன். இந்த கோடையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கல்வி சார்ந்த நூல்களை வாசியுங்கள். கல்வி போதனையில் சமகாலத்தில் உலகில் நடைபெறும் மாற்றங்கள், பல நாடுகளில் கல்வியை எப்படி நடைமுறைபடுத்துகின்றார்கள், நம் நாட்டில் உள்ள சிக்கல்கள் என்ன?, மாணவர்களின் உளவியல், தொழில்நுட்பத்தினை எவ்வாறு திறம்பட பாடம் சொல்லித்தரா பயன்படுத்தலாம், வகுப்பறை அரசியல் என்ன? கல்வியில் என்ன அரசியல்? எது தேவையான விஷயங்கள் என நிறைய வாசியுங்கள்.

வரும் கல்வியாண்டில் உங்கள் வகுப்பில் ஒரு சின்ன பரிசோதனையை ஆரம்பியுங்கள் அது எவ்வளவு சின்னதாகவும் இருக்கலாம் . பரிசோதனைகள் இல்லாத வகுப்புகள் ஆசிரியருக்கு சலித்துவிடும். வகுப்புகள் இயந்திரத்தனமாகிவிடும். பயணிக்கும் பாதையை ஒருமுறை பரிசீலிக்கவும்.

அடுத்த தலைமுறையினரின் சிந்தனை போக்கினை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இருக்கும் நீங்கள் இதனை நிச்சயம் பரிசீலனை செய்வீர்கள்.

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் – ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை – ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் – வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க – ஷாஜகான் – வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் – சிங்கிஸ் அய்மாத்தவ்
9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – ஷ.அமனஷ்வீலி
10. பாகுபடுத்தும் கல்வி – வசந்தி தேவி
11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச.குப்புசாமி – விஜயா பதிப்பகம்
12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
13. கரும்பலகையில் எழுதாதவை – பழ.புகழேந்தி
14. ஆயிஷா – ஆயிஷா நடராசன்
15. தமிழக பள்ளிக் கல்வி – SS.ராஜகோபாலன்
16. வகுப்பறைக்கு வெளியே – இரா.தட்சணாமூர்த்தி
17. எனக்குரிய இடம் எங்கே? – சா.மாடசாமி
18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா – ச. மாடசாமி
19. தமிழக பள்ளிக் கல்வி – பிரச்சனைகளும் தீர்வுகளும்
20. பள்ளிகளில் பாகுபாடு – தமிழில் கோச்சடை
21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் – பெ.தூரன்
22. ஆசிரிய முகமூடி அகற்றி
23. கற்க கசடற – பாரதி தம்பி
24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி
25. தமிழகத்தில் கல்வி – காலச்சுவடு பதிப்பகம்
26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் – புலம் பதிப்பகம்
27. ஆக்கவிய ஆசிரியம் – Rajendran Thamarapura

Comments are closed.