கிளி/ மத்திய மகா வித்தியாலயத்துடனான நட்புறவு ரீதியிலான 19 வயது கிரிக்கெட் போட்டியில் மகாஜனா இனிங்ஸ் மற்றும் 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டி நேற்றும்
இன்றும்(11/12.02.2017) மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிளி/ மத்திய மகா வித்தியாலயம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை பெற பதிலளித்து துடுப்பெடுத்தாடிய மகாஜனா சகல விக்கெட்டுக்களையும் இழந்து 385
ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய கிளி/மத்தி 175 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழக்க மகாஜனா இனிங்ஸ் மற்றும் 101 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
மகாஜனா சார்பில் துடுப்பாட்டத்தில் ஜசிந்தன் 60 வற்சலன் 52 தயுஸ்ரன் 45 முரளிதரன் 36 ஓட்டங்கள் என பெற்றனர். மகாஜனா சார்பில் முதலாவது இனிங்ஸில் தயுஸ்ரன் 3 ஜசிந்தன் 2
கனிஸ்ரன்2 சுஜீவன்2 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் சர்மிலன் 6 சாருஜன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
மகாஜனா மீண்டும் இனிங்ஸ் வெற்றி!!!
ஒருநாளில் முடிந்தது ஆட்டம்!!
மகாஜனாவுக்கும் ஹாட்லிக்கும் இடையிலான 19 வயது கிரிக்கெட் போட்டியில் 1 இனிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் மகாஜனா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இத்தொடரில் இரண்டாவது
இனிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது மகாஜனா! முதல் போட்டியில் யாழ். இந்துவை இனிங்ஸால் மகாஜனா வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
யா/யூனியன் கல்லூரி மைதானத்தில் இன்று(30.01.2017) நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மகாஜனா களத்தடுப்பை தெரிவுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடியது
ஹாட்லி.
ஹாட்லி 102 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மதுரன் 29 கிரிதரன் 26 ஓட்டங்களைப் பெற்றனர். மகாஜனா சார்பில் தயுஸ்ரன் 5 ஜனுசன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலளித்தாடிய மகாஜனா 4 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய தயுஸ்ரன் 105 முரளிதரன் 71 சுஜீவன் 51
சர்மிலன் 27 ஓட்டங்களை குவித்தனர். ஹாட்லி சார்பில் கஜேந்திரன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மீண்டும் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லி 114 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. யதார்த்தன் 34 ஓட்டங்களை பெற்றார். மகாஜனா சார்பில் தயுஸ்ரன் 3 சுஜீவன் 3
ஜெசிந்தன் 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
இதன் மூலம் மகாஜனா 1 இனிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.
மகாஜனா எதிர் ஸ்ரான்லி
முன்னிலை பெற்றது மகாஜனா
மகாஜனாவுக்கும் ஸ்ரான்லி கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற 19 வயது துடுப்பாட்டப் போட்டியில் முதலாவது இனிங்ஸில் முன்னிலை பெற்றது மகாஜனா!!!
இந்த போட்டி நேற்றும்(28.01.2017) இன்றும் (29.01.2017) ஸ்ரான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரான்லி களத்தடுப்பை தெரிவுசெய்ய மகாஜனா துடுப்பெடுத்தாடியது.
முதலாவது இனிங்ஸில் 152 ஓட்டங்களை பெற்று அனைத்து இலக்குகளையும் மகாஜனா இழந்தது. ஜெசிந்தன் 49ரூபவ் பிரணவன் 40 ஓட்டங்களை பெற்று மகாஜனாவுக்கு அடித்தளமிட்டனர். பதிலுக்கு முதலாவது
இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி 137 ஓட்டங்களைப் பெற்று அனைத்து இலக்குகளையும் இழக்க மகாஜனா 15 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. சுஜீவன் 6 இலக்குளை சாய்த்தார்.
இரண்டாவது இனிங்ஸில் மகாஜனா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7 இலக்குகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதிரடியாக துடுப்பாடிய முரளிதரன் 78 ஓட்டங்களையும்
சுஜீவன் 49ரூபவ் பிரணவன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
இரண்டாவது இனிங்ஸில் 241 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி ஆட்டநேர முடிவில் 7 இலக்குகளை இழந்து 87 ஓட்டங்களை பெற்றது. தயுஸ்ரன் 5 இலக்குகளை சாய்த்தார்.
யாழ். இந்துக் கல்லூரியை
இனிங்ஸால் வென்றது மகாஜனா
19 வயது கிரிக்கெட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியை இனிங்ஸ் மற்றும் 20 ஓட்டங்களால் வென்று வரலாறு படைத்துள்ளது மகாஜனக் கல்லூரி!!! இப்போட்டி நேற்றும் இன்றும் மகாஜனக்
கல்லூரி மைதானத்தில் நடந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் இந்து முதலில் துடுப்பெடுத்தாடி 29.5 பந்துப்பரிமாற்றங்களே தாக்குப்படித்து சகல இலக்குகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. துவாரகன்
38ரூபவ் நிகேஸ் 30ரூபவ் சந்தோஸ் 22 ஓட்டங்களை பெற்றனர். மகாஜன சார்பில் பந்துவீச்சில் ஜசிந்தன் 6 இலக்குகளையும் தயுஸ்ரன் 3 இலக்குகளையும் சாய்த்தனர்.
பதிலளித்து முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா 75 பந்துப்பரிமாற்றங்களை எதிர்கொண்டு சகல இலக்குகளையும் இழந்து 328 ஓட்டங்களை குவித்தது. சுஜீபன் 69ரூபவ் சர்மிலன் 66ரூபவ் கிருசன்
64ரூபவ் பிரணவன் 30ரூபவ் சாருஜன் 30 என ஓட்டங்களைக் குவித்தனர்.
167 ஓட்டங்கள் முதலாம் இனிங்ஸில் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 40.3 பந்துப்பரிமாற்றங்களை எதிர்கொண்டு 147 ஓட்டங்களுக்குள் சகல
இலக்குகளையும் இழந்து இனிங்ஸ் மற்றும் 20 ஓட்டங்களால் பாரிய தோல்வியை சந்தித்தது. இந்து சார்பாக இரண்டாம் இனிங்ஸில் கஜநாத் 32ரூபவ் சந்தோஸ் 33 ஓட்டங்களை பெற்றனர். மகாஜனா சார்பாக
இரண்டாம் இனிங்ஸ் பந்துவீச்சில் தயுஸ்ரன் 6 இலக்குகளையும் சாருஜன் 2 இலக்குகளையும் சாய்த்தனர்.