தெரிந்து கொள்வோம். பிரஞ்சுக் கல்வித் திட்டம்.

ஒருவர் கல்வியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அவர் தனது கல்வித் திட்டத்தை தெரிவு முறையில் தான் தங்கியிருக்கிறது. பிரான்சின் கல்வித் திட்டமானது விஞ்ஞானம் இலக்கணம் மற்றும் பொருளாதாரம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

College இல் மாணவர்கள் Brevet des colleges (இலங்கையில் க பொ த சா/த) என்ற பரீட்ச்சைக்கு தயார் படுத்தப்படுகிறார்கள். அங்கு நான்கு வருடங்களில் அவர்கள் சகல துறை சம்பந்தப்பட்ட அடிப்படைகளைப் படிக்கிறார்கள்.

அதன் பின் lycée இல் அவர்கள் மூன்று வருடங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு விஞ்ஞானம் இலக்கணம் அல்லது பொருளாதாரம் Baccalauréat (இலங்கையில் க பொ த உயர்தரம்) என்ற பரீட்சைக்கு தயார்ப் படுத்தப்படுகினார்கள். இந்தப் பட்டம் மேற்கொண்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு மிகவும் அவசியம்.

இதை விட தொழில் சம்பந்தமான குறுகிய காலப் படிப்புக்களும் உள்ளன.

ஆறு வயதில் (CPஇல்) பிள்ளைகள் பிரஞ்சு மொழியில் உள்ள அடிப்படைக் கல்வியைக் கற்கிறார்கள். அத்துடன் சக மாணவர்களுடன் உரையாடுவதற்கு கற்கிறார்கள். இந்த வகுப்பின் நோக்கம் அடுத்த வகுப்பேற்றத்தின் போது (அதாவது CP இல் இருந்து CE1 க்கு) சகல மாணவர்களும் தாங்கள் பொருள் விளங்கி வாசிக்கவில்லை என்றாலும் கூட நன்றாக உச்சரித்து வாசிக்கத் தெரிவது முக்கியமானது.

11 வயதில் college இல் மாணவர்கள் Brevet des collège (இலங்கையில் க பொ த சா/த) என்ற பரீட்டைக்குத் தயார்ப்படுத்துகிறார்கள். அந்த நான்கு வருடங்களில் 5e மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த வகுப்பில் தான் முதன் முதலாக ஒரு தொழில் குறித்து படிப்பதற்கு தெரிவு செய்யலாம். இல்லையேல் பொதுவாகத் திறமையுள்ள மேற்படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் 5e இல் இருந்து 4e பின் 3e க்கு இலகுவாக வகுப்பு ஏறலாம். 3e என்ற வகுப்பின் முடிவில் Brevet des collège என்ற பரீட்சைக்கு பின் மாணவர்கள் lycée professionnel (தொழில் நோக்கிய படிப்புக்கள்) அல்லது Lycée Général இல் சகல துறை சம்பந்தப்பட்ட படிப்புக்களையும் படிப்பதற்கு மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால் Lycée professionnel இல் குறுகிய காலத்தில் விரும்பிய தொழில் துறைக்குள் நுழைவதற்கு தேவையான கல்வியை மட்டும் கற்கலாம்.

பொதுக் கல்வி முறையை (அதாவது lycée général) தெரிவு செய்யும் மாணவர்கள் 3e இல் இருந்து 2d général க்குப் போகிறார்கள். அங்கு அவர்கள் மூன்று வருடங்களின் பின் நடக்கவிருக்கும் baccalauréat பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படுகிறார்கள். 2d général லின் பின் தான் மாணவர்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் கருத்திற்கொண்டு 1 ere S, L, அல்லது ES அதாவது 1ere விஞ்ஞானம், இலக்கணம் அல்லது பொருளாதாரம்-சமூகம் என்ற வகுப்புகளுக்கு ஏற்றப்படுகிறார்கள்.

1 ere என்ற வகுப்பில் baccalauréat பரீட்சையின் முதல் கட்டம் பிரஞ்சுப் பாடத்தில் மட்டும் நடைபெறுகிறது. இதில் வரும் மதிப்பெண்களை அடுத்த வருடம் அதாவது Terminale இல் நடக்கவிருக்கும் இறுதிப் பரீட்சையின் மதிப்பெண்களுடன் சேர்த்து கணக்கெடுக்கப்படும். இந்தச் சான்றிதழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு படிப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.

Baccalauréat என்ற பரீட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அவை BAC S, BAC L மற்றும் BAC ES என்பவையே. 1 ere என்ற வகுப்பிலேயே மாணவர்கள் இந்த முக்கியமான தெரிவைச் செய்யகிறார்கள்.

BAC S எனும் விஞ்ஞானப் பட்டத்துடன் விஞ்ஞானம் மட்டும் அல்லது வேறு துறைகளில் கூட மேற்கொண்டு படிக்கலாம். எனவே இந்தப் பட்டத்துடன் பொருளியல், மருத்துவம், ஆராட்சி, சட்டம், கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொண்டு படிக்கலாம். அதை விட இந்தப் பட்டத்துடன் ஆர்வமும் திறமையுமுள்ள மாணவர்கள் Classes Prepatoires என்ற முக்கியமானதொரு படிப்பிற்கு தெரிவு செய்யப்படலாம். அங்கு பிரான்சிலுள்ள பெரிய பொருளியல் பாடசாலைகளுக்குள் (Ecole d’ingénieur) நுழைவதற்கான பரீட்சைகளை எடுப்பதற்கு மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.

BAC L எனும் இலக்கணப் பட்டத்தில் மொழிகள், கல்வித்துறை மற்றும் இலக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொண்டு படிக்கலாம்.

BAC ES என்ற பொருளாதாரம்-சமூகம் என்ற பட்டத்துடன் பொருளாதாரம், வர்த்தகம், சட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொண்டு படிக்கலாம். பொதுவாக வழக்கறிஞ்ஞர்கள் தொழிலதிபர்கள் இத்துறையினுடாக வெளி வருகிறார்கள்.

அடுத்து தொழில் சம்பந்தப்பட்ட கற்கைகளைப் பார்ப்போம். முன்பு குறிப்பிட்டது போன்று 5 eme என்ற வகுப்பின் பின்பே பொது கல்வி வழியில் நெருக்கடிகளைச் சந்திக்கும் மாணவர்கள் 4 eme Technologie என்ற இயந்திரத் தொழில் சம்பந்தப்பட்ட வகுப்புகளுக்குப் போகிறார்கள். திறமையுள்ளவர்கள் இதனூடாக Bac technologie என்ற பட்டத்தைப் பெற்று தொடரலாம்.

ஆனால் பொதுவாக 3e என்ற வகுப்பில் Brevet des collège என்ற பரீட்சையின் பின் தான் பொது கல்வி வழியில் நெருக்கடிகளைச் சந்திக்கும் மாணவர்கள் அல்லது குறுகிய காலத்தில் படிப்பை முடிக்க விரும்பும் மாணவர்கள் தொழில் சம்பந்தமான படிப்புக்களை Lycée professionnel இல் தொடர்வார்கள். அங்கு இரண்டு வருடத்தில் BEP என்ற பரீட்சைக்கு தயாராகிறார்கள். இந்தப் பட்டம் பல்வேறு துறைகளிலும் உள்ளது. இதே பட்டத்துடன் தொழில் துறைக்குள் உடனடியாவே நுழையலாம். ஆனால் பொதுவாக மாணவர்கள் BAC professionnel என்ற சான்றிதழைப் பெறும் வரை தொடர்ந்து படிப்பது வழக்கம்.

ஆனால் ஏதாவதொரு BAC இன் பின் தொடர்ந்து படித்து எடுக்கும் தொழில் சம்பந்தமான சான்றிதழுக்குத் தான் தொழில் உலகில் மதிப்பதிகம்.

அத்தோடு BAC பரீட்சைக்குப் பின்னரான இரண்டு வருடத்தில் BTS மற்றும் DUT என்ற பட்டத்தை பெற மாணவர்கள் முயற்சிக்கலாம். இந்தப் படிப்புக்குத் தெரிவாவதற்கு மாணவர்களின் திறமை கணக்கிடப்படும். இந்தப் பட்டத்துடன் மாணவர்கள் ஒரு சிறு தொழில் வாய்ப்பை நாடலாம் அல்லது தொடர்ந்து பொருளியல் பாடசாலைகளில் படிக்கலாம்.

Comments are closed.