பாடசாலைகளில் விடுமுறை எதற்காகாக .விடுமுறை யாருக்கு மாணவர்களுக்கா ஆசிரியர்களுக்கா மாணவர்களுக்குத்தன். ஆசிரியர்களுக்கு அல்ல.
மாணவர்களது உள வள மேம்பாட்டிற்கான நாட்களே விடுமுறை நாட்கள்.ஆனால் நம் பெற்றோரும் ஆசிரியர்களும் நடந்து கொள்ளும் முறை மாணவர்களது உள நலனை பாதிப்பதாக உள்ளது.
பிரத்தியேக வகுப்புகள் இக்காலத்திலேயே அதிகம் நடத்தப் படுகின்றன.காலை மாலை என பிள்ளைகள் அலைக் கழிக்கப் படுகின்றனர்.
பிரத்தியேக வகுப்புகள் வீடுகளிலும் ரியூசன் சென்ரர்களிலும் களை கட்டும் வியாபாரமகியுள்ளது.
என்னுடைய மகள் இருக்கும் வரையிலும் விடுமுறை காலத்தில் அவள் ஒரு நாளும் படித்ததில்லை விடுமுறை எதற்கப்பா என கேள்வி கேட்பாள் ஆனால் அவள் வகுப்பில் மிகுந்த திறமையாளராகத்தான் இருந்தாள்.
விடுமுறை காலத்துல் பிள்ளைகளை சுதந்திரமாக இருக்க விடுங்கள் அவர்கள் சுதந்திர சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் இடம் கொடுங்கள்.
இறுகிப் போன ஒரு இளம் சந்ததியினரை உருவாக்காமல் அரோக்கியமான ஒரு புதிய சமூகத்துக்கு அத்திவாரம் இடுங்கள் பிள்ளைகளை அவர்கள் சிந்தனைகளை கட்டுப் படுத்தாதீர்கள்.
நாளைய உலகம் அவர்களுக்கானது உங்கள் ஆசைகளை அவர்களில் திணிக்காதீர்கள்.