வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த உதைபந்தாட்டத் சுற்றுப்போட்டியின் கிண்ணத்தை வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது. பசையூர் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட டயமன்ஸ் அணி 3:2 என்ற சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றிபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தின் முதல் பாதியாட்டத்தில் 1:0 என அன்ரனிஸ் முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது பாதியாட்டத்தில் 1 கோலை பெற்ற டயமன்ஸ் சமநிலைப்படுத்தியது. மேலதிக நேரம் வழங்கப்பட்டும் இரு அஅணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. வெற்றி – தோல்வியை தீர்மானிப்பதற்கான சமநிலை தவிர்ப்பு உதையில் டயமன்ஸ் 3:2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Comments are closed.