1. மகாஜனக்கல்லூரிக்கு ஐம்பதாயிரம்ரூபா செலவில் கரபந்தாட்ட மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
2. பாடசாலை நிறுவியவர் நினைவுதின விழாவின்போது அதிபர் கனகசபாபதி நினைவுப்பரிசில் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் இரு மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
3. ஐந்தாம்ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை அண்மித்தும் வெற்றிபெறாது சோர்ந்துபோன
மாணவர்களை ஆற்றுப்படுத்த, அந்தமாணவர்களுக்கு ஆயிரம் ரூபாவும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன் மூலம் எமது பாடசாலையை அண்மித்த அயற்கிராம மாணவர்களும் பயன் பெற்றனர். இவ் ஊக்குவிற்பிற்காக
எண்பதினாயிரம் ரூபாக்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
4. 2015 – வசதிகுறைந்த மாணவர்களுக்கு சீருடைவழங்குவதற்காக இரண்டு இலட்சத்து இருபத்தியேழாயிரம்
ரூபாக்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
5. 2015 தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களது 40 வது நினைவையொட்டித் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்,
இசைத்தொகுப்பு, குறுந்தகடு மற்றும் ‘எட்டாவது அதிசயம்’ நூல் வெளியீட்டு விழா பிரான்சில் எம்மால் சிறப்பாக
நடாத்தப்பட்டது. இதன்மூலம் 4801.00 யூறோக்கள் தட்சணாமூர்த்தி நிதியத்திற்கு வழங்கப்பட்டது.
6. 2015 – பாடசாலை சிறுவர் விளையாட்டுப்போட்டிச்செலவிற்காக 100000.00 ரூபா (ஒருஇலட்சம்)
அனுப்பிவைக்கப்பட்டது. தெல்லிப்பழையைச்சேர்ந்த திரு திருமதி. சிவசிதம்பரம் அவர்களின் நினைவாக இந்நிதி
வழங்கப்பட்டது.
7. பிரான்சில் நடைபெற்ற தமிழ் விளையாட்டுக்கழகங்களுக்கிடையான உதைபந்தாட்டப்போட்டியில் கலந்துகொண்ட
லண்டன் மகாஜனா ப.மா.ச. அணியை வரவேற்று விருந்துபசாரம் அளித்து கௌரவிக்கப்பட்டது. லண்டன் அணி
தமது திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
8. 2016 – பழைய தளபாட திருத்தவேலைகளுக்காக ஒரு இலட்சம்ரூபா அனுப்பப்பட்டது.
9. 2016 – துரையப்பாபிள்ளை மண்டபத்திற்கான 500 கதிரைகளுக்காக 528000.00 ரூபா (ஐந்து இலட்சத்து
இருபத்து எண்ணாயிரம்) வழங்கப்பட்டது.
10. 2016 பாடசாலை பாராமரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்ய மேலதிக நிதிக்கான கொடுப்பனவாக 500000.00
ரூபா (ஐந்து இலட்சம்) வழங்கப்பட்டது.
11. 2016 – இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ்வாழும் மாணவர்க்கான உதவியாக 12515.00 யூரோக்கள்
வழங்கப்பட்டது. இவ் உதவி இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியம் – பிரான்ஸ் ஊடாக வழங்கப்பட்டது.
12. பிரான்சிலுள்ள மகாஜனர் குடும்ப ஒருங்கிணைவாக கோடைகால சுற்றுலாக்கள் நாட்த்தப்பட்டன.
13. பாரிஸ் சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கத்தின் பெயரால் சரஸ்வதி பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டன..
14. 2016 ம் ஆண்டு எமது சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
வெல்லுக மாஜன மாதா!
மகாஜனக்கல்லூரி ப. மா. ச.
பிரான்ஸ்